International Journal For Multidisciplinary Research

E-ISSN: 2582-2160     Impact Factor: 9.24

A Widely Indexed Open Access Peer Reviewed Multidisciplinary Bi-monthly Scholarly International Journal

Call for Paper Volume 7, Issue 4 (July-August 2025) Submit your research before last 3 days of August to publish your research paper in the issue of July-August.

Thiruppattu Koorum Pangal

Author(s) Ms. Rama R, Dr. T. Balchander
Country India
Abstract சுந்தரர் தேவாரத்தின் தமிழ் சிறப்பு முறை சுந்தரரின் தமிழ் புலமையை 'மிஞ்சு தமிழ்’ என்பார்கள். தமிழ்மொழியானது இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழாய் வளர்ந்து கன்னித்தமிழாய், செந்தமிழாய், தனித்தியங்கும் பைந்தமிழாய் வளம் வரும் மொழியாகும். தமிழ் மொழி வண்டமிழாய், காலத்தால் அழியாத கன்னி தமிழாய் இளமையுடன் திகழக்கூடியது. வலிமையுடையது செழுமையுடைய மொழி தமிழ் வளர்ந்தோங்கும். பிறமொழி கலப்பில்லாமல் மொழியாகும். தமிழ் இலக்கியம் ஒவ்வொரு இலக்கை குறிக்கோளை மக்களிடையே விதைத்து பண்பட்ட மனிதர்களாய் வாழ வழிவகுத்தது. சுந்தரரும் அவரின் ‘மிஞ்சு தமிழ் மூலம் சிவபெருமானின் மீது கொண்ட மிகுந்த பக்தியால் இவர் இயற்றிய ஏழாம் திருமுறை ஏழேழு தலைமுறையும் படித்து அன்றைய காலகட்டத்தில் நடந்த நிகழ்வை அறியும்படி செய்துள்ளார். இதன் வழியே இவரின் தமிழ் புலமையையும் வெளிப்படுகிறது. இவர் சென்ற கோவில்களில் நமக்கு 100 பதிகங்களே கிடைத்துள்ளன. இந்த ஒவ்வொரு சிவதலம் பற்றிய வரலாறு அறிந்து அந்த ஊரின் சிறப்பு அறிந்து ஒவ்வொரு ஊருக்கும் நெடுந்தூரப் பயணம் மேற்கொண்டு சற்றும் சலிப்பில்லாமல் இவர் பாடிய கவிதைவரிகள் இவர் சிவபெருமான் மீது கொண்ட பக்தி மட்டுமின்றி தமிழ்மொழி மீது கொண்ட அன்பும் விளங்கும். இவரின் பதிகங்களை படிக்கும் ஏழேழு தலைமுறையும் தமிழ் மொழியை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இயற்றியுள்ளார். இவர் சிவபெருமானை பற்றி பாடும்போது அவரை பற்றிய ஆடை, அணிகலன்களுக்கு ஒவ்வொரு பாட்டிலும் ஒவ்வொரு விதமான தமிழ் சொல்லைகொண்டு பயன்படுத்தியுள்ளார். இது போன்று ஒரு பொருளையுடைய பல சொற்களின்பயன்பாடு, இவர் தமிழ்ப் புலமைக்கு ஒரு சான்று. இவரின் ஒவ்வொரு பாடலும்பண்சுமந்த தனித்துவம் பெற்றுள்ளது. இவரின் பாடலில் சிவபெருமானை மட்டும் பற்றிப்பாடாமல் நடனத்திற்கு தேவைப்படும் பெரும்பாலான செய்தியை இவரின் பாடலில் வெளிப்படுத்தி உள்ளார். இன்றைய கர்நாடக இசைக்கு அடிப்படை தாய் தமிழே.பண்ணொடு தமிழொப்பாய்' என்னும் தேவாரப் பண்ணிசை வகுத்தனர். இதற்கு ஒரு சான்றாக சுந்தரர் தேவாரமும் பண்சுமந்து திகழ்கிறது. சுந்தரர் அவர் கவிதை வரிகளில் பயன்படுத்திய வெவ்வேறான தமிழ் சொற்களிளை பயன்படுத்தியுள்ளனர். கங்கை, பிறை, சடை, திருமேனி, ஆடல், முக்கண், குழை, நீலகண்டம் புலித்தோல் உடை, யானை உரி, பல கருவியேந்திய பல கைகளின் வருணனை போன்றவற்றை பல சொற்களை பயன்படுத்தி ஒரு பொருளுணர்த்த படைத்துள்ளார்.
Keywords சுந்தரர், திருப்பாட்டு பண்
Published In Volume 7, Issue 4, July-August 2025
Published On 2025-07-19
DOI https://doi.org/10.36948/ijfmr.2025.v07i04.51499
Short DOI https://doi.org/g9t2bx

Share this